மலையக மக்களுக்கு துரோகம் செய்யாதீர்! – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் ஆவேசம்

#SriLanka #Parliament #government #Country #LANKA4 #budget #community
Abi
5 hours ago
மலையக மக்களுக்கு துரோகம் செய்யாதீர்! – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் ஆவேசம்

மலையக மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் சிதைக்கக்கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், மலையக மக்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நம்பியுள்ள நிலையில், அவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மலையக மக்களின் முக்கிய சேமிப்பாகக் காணப்படும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றுக்கு 14 சதவீத வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2045ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்குக் குழுவொன்றை அமைக்கும் முன்மொழிவு குறித்தும் அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான குத்தகைக் காலம் நீடிக்கப்பட்டால், மலையக மக்களின் காணி உரிமைக் கனவு பாதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், மலையக மக்களின் காணி உரிமையைத் தடுத்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!