குழந்தைகளுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய தமிழக முதல்வர் விஜய்

#India #Tamil Nadu #children #LANKA4 #celebration #Vijay #ChiefMinister #L4
Prasu
37 minutes ago
குழந்தைகளுடன் சிறுவர்கள் தினத்தை கொண்டாடிய தமிழக முதல்வர் விஜய்

சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

நாடு முழுவதும் நாளை சிறுவர்கள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தை யொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டது. பல்வேறு கேக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன. 

இதற்கான நிகழ்ச்சி, கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் கேக் வழங்கினார். மேலும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும் வழங்கிய அவர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!