அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து ஆராய்வு!

#SriLanka #LANKA4 #service #Salary #Examination #Principal #Teacher
Mithra
47 minutes ago
அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து ஆராய்வு!


ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் வேதன முரண்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உபகுழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கல்வி, தொழிலாளர் படை மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட குறித்த உபகுழுவின் கூட்டம், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ச தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு மாறும் போது ஏற்படும் சம்பள வேறுபாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அதிபர் சேவை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்களின் அதிகாரிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!