இலங்கை சுகாதாரத் துறைக்கு 223 புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு!

#SriLanka #Health #government #LANKA4
Abi
2 hours ago
இலங்கை சுகாதாரத் துறைக்கு 223 புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு!

நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நான்கு வெவ்வேறு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு இன்று (14) புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 36 பேரும், களஞ்சியக் காப்பாளர் பதவிக்கு 27 பேரும், சிறு சேவைப் பொறுப்பாளர் பதவிக்கு 6 பேரும், சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிக்கு 154 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதே இந்த ஆட்சேர்ப்பின் பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக, சில பதவிகளுக்கு கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக ஆட்சேர்ப்புகள் இடம்பெறாத நிலையில், இந்தப் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!