திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை வரை விளக்கமறியலில்!
#SriLanka
#Trincomalee
#Buddha
#LANKA4
#Court
Abi
14 hours ago
திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் கட்டடம் நிர்மாணித்தல் மற்றும் புத்தர் சிலை நிறுவுதல் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அவரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த விகாரை வளாகத்தில் வழிபாட்டு மண்டபம் அமைத்தல் மற்றும் புத்தர் சிலை நிறுவுதல் தொடர்பான விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.