இலங்கையை அச்சுறுத்தும் ‘அக்வான்’ சூறாவளி – கடற்பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

#SriLanka #weather #LANKA4 #Warning #Cyclone
Abi
14 hours ago
இலங்கையை அச்சுறுத்தும் ‘அக்வான்’ சூறாவளி – கடற்பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகளை அண்மித்துப் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் தீவிரமடைந்து சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இதற்கு ஈரான் நாட்டினால் முன்மொழியப்பட்ட ‘அக்வான்’ (AKVAN) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘அக்வான்’ என்பதற்கு ‘அசுரன்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

இந்தச் சூறாவளி, திருகோணமலையிலிருந்து சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன், மேலும் தீவிரமடைந்து இன்று மாலை 5.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் காலை 5.30 மணியளவில் மிகச் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி எதிர்வரும் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையோரத்தில் நெல்லூர் மற்றும் டூணி பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இதனைக் கருத்திற்கொண்டு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ சமூகத்தினருக்கும் கடல்சார் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று – கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்! நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு அல்லது வடமேற்குத் திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் குறித்த கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அத்தகைய வேளைகளில் கடற்பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும். எனவே, மீனவர்கள், கடல்சார் ஊழியர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!