விசாரணை வளையத்திற்குள் நெதன்யாகு? கைது செய்யப்படுவாரா?
#SriLanka
#ARREST
#Investigation
#LANKA4
#ImportantNews
#Netanyahu
Abi
13 hours ago
இஸ்ரேலில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் அரபு கட்சி முறைகேடு செய்திருந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டைவிட, அவரது அலுவலகத்திலிருந்து வந்த தகவல்கள்தான் தேர்தல் களத்தையே பரபரப்பாக்கின.
இந்நிலையில், இது குறித்து இஸ்ரேலிய காவல்துறை மற்றும் அட்டர்னி ஜெனரல், நெதன்யாகு அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
தேர்தல் சமயத்தில், வாக்கு மோசடி நடந்ததாக நெதன்யாகு அலுவலகம் பொய்யான தகவல்களை பரப்பியது என்று எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது நெதன்யாகு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது