தமிழ் பேசும் மக்களின் நலனில் இந்தியாவின் தொடர்ச்சியான அக்கறை – டக்ளஸ் தேவானந்தா மகிழ்ச்சி!

#India #SriLanka #Douglas Devananda #people #LANKA4 #Awareness
Abi
13 hours ago
தமிழ் பேசும் மக்களின் நலனில் இந்தியாவின் தொடர்ச்சியான அக்கறை – டக்ளஸ் தேவானந்தா மகிழ்ச்சி!

தமிழ் பேசும் மக்களின் நலன்களில் தமக்குள்ள தார்மீகப் பொறுப்பை உணர்ந்து இந்தியா தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா தலைமையில் தமிழ் பேசும் கட்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சமகால அரசியல் விவகாரங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் பேசும் தரப்பினர் தமக்கிடையில் மாத்திரமன்றி, தென்னிலங்கை ஆட்சியாளர்களுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!