கஹவத்த வைத்தியசாலையில் அதிகாலை பரபரப்பு – பழைய கட்டடத்தில் தீப்பரவல்!

#SriLanka #Hospital #Department #LANKA4 #fire #municipal council #Building
Abi
13 hours ago
கஹவத்த வைத்தியசாலையில் அதிகாலை பரபரப்பு – பழைய கட்டடத்தில் தீப்பரவல்!

இரத்தினபுரி, கஹவத்த ஆதார வைத்தியசாலையில் இன்று (17) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் பயன்பாடின்றி மூடப்பட்டிருந்ததுடன், பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்றிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்ட கட்டடம் முன்னர் உள்நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

எனினும், புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோயாளர்களுக்கான விடுதி புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!