செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச நீதியைக் கோரி யாழில் மாபெரும் போராட்டம்!

#SriLanka #Jaffna #Protest #International #LANKA4 #Justice #Chemmani Mass Grave
Abi
10 hours ago
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச நீதியைக் கோரி யாழில் மாபெரும் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை நிராகரித்து, சர்வதேச விசாரணையையும் நீதியையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று (17.11.2026) முற்பகல் 10.30 மணியளவில் அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இப்போராட்டம் ஆரம்பமானது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட போராட்டக்காரர்கள், செம்மணி விவகாரத்தின் முழுமையான உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!