இலங்கைக்கு 7 புதிய இராஜதந்திரப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு!

#SriLanka #President #AnuraKumaraDissanayake #Ambassador
Abi
9 hours ago
இலங்கைக்கு 7 புதிய இராஜதந்திரப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதற்கமைய, தென்கொரியாவின் தூதுவராக Kim Youn-Jung, சுவிட்சர்லாந்தின் தூதுவராக Daniel Hunn, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக Sylvia Hartleif, எகிப்தின் தூதுவராக Ahmed El-Sayed Abdel Halim Amer Helal மற்றும் லாவோஸின் தூதுவராக Vithaya Xayavong ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நமீபியாவின் உயர்ஸ்தானிகராக Alex L. Tukuhupwele மற்றும் சிங்கப்பூரின் உயர்ஸ்தானிகராக Patrick Daniel ஆகியோரும் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.

இதன்போது, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!