கடுவலையில் பயங்கர தீ விபத்து – இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தின் நால்வர் பலி!
#SriLanka
#children
#LANKA4
#fire
#Building
Abi
16 hours ago
கடுவலை பகுதியில் இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ள இருமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (19) காலை இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு வயது, ஆறு வயதுடைய பிள்ளைகள் என நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய குறித்த இருமாடிக் கட்டிடத்தின் கீழ் மாடியில் இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்தினர் மேல் மாடியில் வசித்து வந்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கோட்டை தீயணைப்புப் பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.