நில்திய பொக்குன சுற்றுலாவுக்கு திடீர் தடை – அனுமதியின்றி அழைத்துச் சென்றால் சட்ட நடவடிக்கை!

#SriLanka #LANKA4 #Ban #Visit #Legal
Abi
14 hours ago
நில்திய பொக்குன சுற்றுலாவுக்கு திடீர் தடை – அனுமதியின்றி அழைத்துச் சென்றால் சட்ட நடவடிக்கை!

இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான 'நில்திய பொக்குன' பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான பார்வையிடும் நடவடிக்கைகள் மீண்டும் உத்தியோகபூர்வமாகவும் முறையாகவும் ஆரம்பிக்கப்படும் வரை, அப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை நில்திய பொக்குன பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கிடைத்த தகவல்களையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் மற்றும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் பங்குபற்றல் இன்றி எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் அப்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள நில்திய பொக்குன பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையான அரச ஒழுங்குமுறையின் கீழ் முன்னெடுப்பதற்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவுறுத்தல்களையும் விதிமுறைகளையும் மீறிச் செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!