2025ஆம் ஆண்டில் மின்சார சபைக்கு 38,739 மில்லியன் ரூபா நட்டம் – நாடாளுமன்றத்தில் தகவல்!

#SriLanka #Parliament #Project #LANKA4
Abi
11 hours ago
2025ஆம் ஆண்டில் மின்சார சபைக்கு 38,739 மில்லியன் ரூபா நட்டம் – நாடாளுமன்றத்தில் தகவல்!

இலங்கை மின்சார சபை 2025ஆம் ஆண்டில் 38,739 மில்லியன் ரூபா நிகர நட்டத்தைச் சந்தித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று (19) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மின்சார சபையின் மொத்த வருமானம் 422,506 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024ஆம் ஆண்டில் 141,604 மில்லியன் ரூபாவும், 2023ஆம் ஆண்டில் 57,632 மில்லியன் ரூபாவும் மொத்த இலாபமாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணக் குறைப்பு காரணமாக வருமானம் கணிசமாகக் குறைந்தமை, மின்சாரக் கொள்வனவுச் செலவுகள் அதிகரித்தமை மற்றும் கூரைமேல் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரித்தமை ஆகியவை 2025ஆம் ஆண்டின் நட்டத்துக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து மின்சார சபைக்கு எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை எனவும், 2023ஆம் ஆண்டில் 277 மில்லியன் ரூபா மேலதிக பங்கு முதலீடாக வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!