2008ஆம் ஆண்டு கொலை வழக்கு – 18 ஆண்டுகளின் பின்னர் 8 பேருக்கு மரண தண்டனை!

#SriLanka #Batticaloa #Death #Police #Murder #LANKA4 #Case
Abi
11 hours ago
2008ஆம் ஆண்டு கொலை வழக்கு – 18 ஆண்டுகளின் பின்னர் 8 பேருக்கு மரண தண்டனை!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், வழக்கின் ஒன்பதாவது பிரதிவாதியை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

பின்னர் அவரது சடலம் புதைக்கப்பட்டு, அதன் மீது வாழைமரம் நாட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரால் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016ஆம் ஆண்டு குறித்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, எட்டு பிரதிவாதிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டவிரோதக் கூட்டத்தில் அங்கம் வகித்தமைக்காக ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும், ஆட்கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!