கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்!
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களால் இன்று மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஈகைச்சுடரை மாவீரரின் தந்தையும் பிரதேச சபை உறுப்பினருமான குட்டி மாமா ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பொதுச்சுடரைப் பிரதேச சபை உறுப்பினர் கணேசபிள்ளை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவீரரின் தாயாரும் பிரதேச சபை உறுப்பினருமான விக்டர் சாந்தி, பொதுத் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மலர் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
ஈ.பி.டி.பி. உறுப்பினர்களைத் தவிர்த்து, கரைச்சி பிரதேச சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக் குழு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்