“ரோஹிங்கியா மக்களை மியான்மர் இனப்படுகொலை செய்தது”
#people
#government
#LANKA4
#ImportantNews
#Word
#Myanmar
Abi
3 hours ago
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சொந்த நாட்டுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
இந்த கொடூரத் தாக்குதல்களால் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாக தப்பிச் சென்றனர்