பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் வெளியீடு!

#SriLanka #LANKA4 #education #Teacher #Postponed #interviews
Abi
2 hours ago
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் வெளியீடு!

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நேர்முகத் தேர்வுகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எனினும், நவம்பர் 21ஆம் திகதி முதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள ஏனைய நேர்முகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

மாகாண ரீதியான புதிய நேர்முகத் தேர்வுத் திகதிகள்: - ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள்

நவம்பர் 26 - வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்

நவம்பர் 28 - மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள்

நவம்பர் 29 - மத்திய மாகாணம் – டிசம்பர் 01 பாடசாலை விருப்பத் தெரிவு தொடர்பான அறிவிப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவுகளைப் பதிவு செய்வதற்கான இணையவழி முறைமை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 'Teacher Recruitment Application System' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமையில் விண்ணப்பதாரர்கள் தமக்குரிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நாளின் இரவு 8 மணி வரை உள்ளிட முடியும். 

நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த முறைமைக்கான கால அவகாசம் முடிவடையாது எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்களுக்கு விசேட அறிவிப்பு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நாள் வரை அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடந்த 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு வருகை தர வேண்டும். அங்கு காலை 8 மணி முதல் இணையவழி முறைமையில் பிரவேசிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இணையவழி முறைமையில் தகவல்களைப் பதிவு செய்வதுடன், நேர்முகத் தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியும்.

தேர்வுகளில் பங்கேற்ற பின்னரும், அன்றைய தினம் இரவு 8 மணி வரை காத்திருப்பு அறைக்குச் சென்று பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பிரதியெடுத்து கையளிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திகதி மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குக் கல்வி அமைச்சு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!