பஹ்ரைனில் வாழும் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல்!
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன்படி, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள், பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் அவசர எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறும் அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அவசர உதவிகள் தேவைப்படும் இலங்கையர்கள் தொடர்புகொள்வதற்கான அவசர தொலைபேசி இலக்கங்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
எனவே, பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாதுகாப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.