உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா அதிரடி தீர்மானம்

#world_news #Attack #Ukraine #LANKA4 #Drone #Britain
Mithra
1 hour ago
உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா அதிரடி தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கும் வகையில், உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

பேர்லினில் நடைபெற்ற உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் 'Coalition of the Willing' கூட்டத்தில் பிரித்தானியப் பிரதமர் அன்டி பர்ன்ஹாம் இதனை அறிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள 260 மில்லியன் பவுண்ட் பெறுமதியான புதிய இராணுவ உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த ட்ரோன்கள் சுமார் 1,000 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக்கூடியதுடன், அதிக எடையுள்ள வெடிபொருட்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் உக்ரைனுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 80 சதவீதமானது பிரித்தானியாவிலேயே செலவிடப்படவுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!