17 வயது மாணவியை வன்கொடுமை செய்த பூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறை!

#SriLanka #ARREST #Student #Investigation #Prison #LANKA4
Mithra
17 hours ago
17 வயது மாணவியை வன்கொடுமை செய்த பூசாரிக்கு 13 ஆண்டுகள் சிறை!

2011ஆம் ஆண்டு 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற கோவில் பூசாரிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வியைத் தொடர்வதற்காக பூசாரியின் வீட்டில் தங்கியிருந்த மாணவி, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை வெளியே தெரிவித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மாணவி அச்சுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்னர் மாணவி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், DNA பரிசோதனையில் பிறந்த குழந்தையின் உயிரியல் தந்தை குறித்த பூசாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்றம் முதலில் 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தது. 

இதனை எதிர்த்து பூசாரி தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், குற்றவியல் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுடன் சிறைத்தண்டனையை 13 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், 5,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற குற்றத்திற்கு நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!