இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLanka #Rain #LANKA4 #Warning #Public #Department of Meteorology
Mithra
18 hours ago
இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22) சுமார் 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி, மாத்தறை, குருணாகல், பதுளை மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!