முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவு அதிரடியாகக் குறைப்பு!

#SriLanka #Parliament #government #LANKA4 #Former President
Mithra
16 hours ago
முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவு அதிரடியாகக் குறைப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவினம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக மொத்தமாக 110.51 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக அதிகபட்சமாக 61.66 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகைகள் வருமாறு:

மைத்திரிபால சிறிசேன – 18.57 மில்லியன் ரூபாய்

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – 13.69 மில்லியன் ரூபாய்

கோட்டாபய ராஜபக்ச – 11.02 மில்லியன் ரூபாய்

ரணில் விக்ரமசிங்க – 2.53 மில்லியன் ரூபாய்

மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவுக்காக 3.04 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

எனினும், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக தலா 880,000 ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2026ஆம் ஆண்டில் ஹேமா பிரேமதாசவுக்காக எவ்வித செலவினங்களும் பதிவாகவில்லை.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் 110.51 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவு, 2026ஆம் ஆண்டில் மொத்தமாக 4.39 மில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!