2027 முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்!

#SriLanka #School #Student #children #LANKA4 #education
Mithra
15 hours ago
2027 முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்!

2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றின் இணைப்புடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரச சேவைகளை மேலும் வினைத்திறனாக்குதல், புதிய பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துதல், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் மேம்பாடு, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!