பதுளையில் வீட்டின் மீது சரிந்த மண்மேடு - ஐவர் நூலிழையில் உயிர் தப்பினர்!

#SriLanka #people #Badulla #LANKA4 #House
Mithra
14 hours ago
பதுளையில் வீட்டின் மீது சரிந்த மண்மேடு - ஐவர்  நூலிழையில்  உயிர் தப்பினர்!

பதுளை, வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹுலங்ககபொல்ல பேக்கரி சந்திப் பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. எனினும், வீட்டில் இருந்த ஐவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று (21) மாலை சுமார் 7 மணியளவில் நிலவிய மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்குள் கல் ஒன்று விழுவதைக் கவனித்த ஒருவர், உடனடியாக வீட்டிலிருந்த ஏனையவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டின் பின்புறத்திலிருந்த கல் மதிலுடன் மண்மேடும் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த தளபாடங்கள், சிறுவர்களின் பாடப்புத்தகங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் மண் மற்றும் கற்களுக்குள் புதையுண்டு சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஹுலங்ககபொல்ல கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!