அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி ஏலத்தில்!

#America #world_news #Hair #LANKA4 #Former President
Mithra
14 hours ago
அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி ஏலத்தில்!

அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடியின் ஒரு பகுதி ஏலத்தில் 4,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1799ஆம் ஆண்டு அவர் உயிரிழப்பதற்கு முன்னர், அவருக்கு விருந்தளித்த ஜோன் காட்ஸ்பியிடம் குறித்த தலைமுடி இருந்துள்ளது.

பின்னர், காட்ஸ்பியின் வழித்தோன்றல் ஒருவரிடமிருந்து சேகரிப்பாளர் ஒருவர் இந்தத் தலைமுடியைப் பெற்றுக்கொண்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஜோர்ஜ் வாஷிங்டனின் மூன்று தலைமுடித் துண்டுகள் சுமார் 40,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!