பேட்ரியாட் ஏவுகணைகளை விடுவிக்குமாறு அமெரிக்காவை ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
#Death
#America
#Attack
#Russia
#Missile
#Ukraine
#LANKA4
#Zelensky
#L4
Prasu
2 hours ago
உக்ரைனின் 20 பிராந்தியங்களில் ஒரு வாரமாக ரஷ்யா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.
டெலிகிராமில் பதிவிட்ட ஒரு பதிவில், கடந்த வாரத்தில் ரஷ்யா சுமார் 2,700 தாக்குதல் ட்ரோன்களையும், கிட்டத்தட்ட 1,460 வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகளையும், 165 ஏவுகணைகளையும் ஏவியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் கணிசமானவை பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும் அவற்றில் சில வட கொரியாவால் வழங்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பு பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளுக்கு உக்ரைனில் பற்றாக்குறை நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.