ஒரே நிகழ்வில் நயன்தாரா – சிம்பு சந்திப்பு; வைரலாகும் காணொளிகள்!

#India #LANKA4 #simbu
Abi
4 hours ago
ஒரே நிகழ்வில் நயன்தாரா – சிம்பு சந்திப்பு; வைரலாகும் காணொளிகள்!

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று (22) பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில், நடிகர் சிம்புவையும் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

கடந்த காலங்களில் நயன்தாரா மற்றும் சிம்பு தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இருவரும் ஒரே நிகழ்வில் சந்தித்துக்கொண்டமை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!