கிளிநொச்சி குளத்தில் மீன்கள் உயிரிழப்பு – அமைச்சரின் உடனடி தலையீடு!

#SriLanka #Death #Kilinochchi #Investigation #Fisherman #Fish #LANKA4 #Tank
Mithra
1 hour ago
கிளிநொச்சி குளத்தில் மீன்கள் உயிரிழப்பு – அமைச்சரின் உடனடி தலையீடு!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள், நன்னீர் இறால்கள் மற்றும் மீன் குஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

குளத்தின் நீர் வெளியேற்றப்பட்ட விதம் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளின்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தினால் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவக் குடும்பங்கள் பெரும் பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களின் இழப்புகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் தொடர்பிலும் விரிவான தகவல்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இறந்த மீன்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பணியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், இராணுவத்தினர், கிளிநொச்சி குள மீனவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், குளத்து நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!