உடவளையில் அதிகாலை கோர விபத்து – பாரவூர்தி மரத்துடன் மோதி சாரதி பலி!
#SriLanka
#Death
#Police
#Accident
#Investigation
#LANKA4
#Driver
Mithra
1 day ago
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியின் உடவளவை, 96ஆம் பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி இரும்புத் தொகையை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, பாரவூர்திக்குள் சிக்கிக்கொண்ட சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.