வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை - இறுதி போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி

#India #SriLanka #LANKA4 #Cricket #Qatar #ODI #L4
Prasu
43 minutes ago
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை - இறுதி போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா ஏ அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா ஏ அணி சார்பில், திலக் வர்மா 53 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 78 ஓட்டங்களும் வைபவ் சூர்யவன்ஷி 40 ஓட்டங்களும் ஷாபாஸ் அகமது 54 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து 318 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.

இலங்கை ஏ அணி சார்பில், அதிரடியாக விளையாடிய லசித் 116 ஓட்டங்களும் சினெத் 105 ஓட்டங்களும் மதுஷ்க 58 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஏ அணி வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!