பிரித்தானியாவின் ராயல் நேவி தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
#LANKA4
#England
#Bomb
#Threat
#Navy
#L4
Prasu
19 hours ago
பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத்தில் உள்ள ரோயல் நேவி தலைமையகமான HMS எக்ஸலண்ட் மீது குண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் பணியாளர்கள் தலைமையகத்தை முழுமையாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனைகளில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தளத்தின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்குவதாகவும் ரோயல் நேவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.