அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் 04ம் திகதி நிறைவு
#SriLanka
#School
#government
#LANKA4
#L4
#holiday
Prasu
7 hours ago
2026ம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 04ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய வேண்டும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2027ம் ஆண்டிற்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி மாதம் 04ம் திகதி ஆரம்பமாக வேண்டும் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இப்பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை உரிய நேர அட்டவணைகளுக்கு அமைய எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.