1,000 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் ரோபோ நாய்கள்! தீயணைப்புப் பணியில் புதிய தொழில்நுட்பம்

#Robot #LANKA4 #technology #heat #fire #Degree
Abi
36 minutes ago
1,000 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் ரோபோ நாய்கள்! தீயணைப்புப் பணியில் புதிய தொழில்நுட்பம்

சீனாவில் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கக்கூடிய நவீன தீயணைப்பு ரோபோ நாய் ஒன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜியாங்சு மாகாணத்தின் சூசோ நகரில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தீ விபத்துகளின்போது அதிக வெப்பம் நிலவும் பகுதிகளுக்குள் மனிதர்கள் நுழைவது ஆபத்தானதாக இருப்பதால், இத்தகைய ரோபோக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த ரோபோ நாயானது 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இயங்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. 

மேலும், சுமார் 95 சதவீதமான தீ விபத்துச் சூழல்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 அடர்ந்த புகையிலும் காட்சிகளைத் தெளிவாகக் கண்டறியும் லேசர் தொழில்நுட்பம், 5ஜி இணைப்பு மற்றும் நிகழ்நேர காணொளிப் பரிமாற்ற வசதிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் மூலம் தீ பரவும் இடங்கள் மற்றும் சிக்கியுள்ளவர்களின் இருப்பிடங்களைக் கண்டறிய தீயணைப்பு வீரர்களுக்கு முடியும். குறிப்பாக, உயரமான கட்டடங்களுக்குள் ஏற்படும் தீ விபத்துகளின்போது மனிதர்களை ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன்னர், இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி நிலைமையை மதிப்பிட முடியும்.

எனினும், இத்தொழில்நுட்பத்தின் பேட்டரி ஆயுள், பராமரிப்புச் செலவு மற்றும் சிக்கலான சூழல்களில் அதன் செயல்திறன் உள்ளிட்டவை மேலும் சோதிக்கப்பட வேண்டியுள்ளன.

இந்நிலையில், இத்தகைய ரோபோ நாய்கள் எதிர்காலத்தில் தீயணைப்புப் பணிகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவதுடன், மனித உயிர்களைக் காப்பாற்றுவதிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!