முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் சுட்டுக்கொலை – மூன்று சந்தேகநபர்கள் கைது!

#SriLanka #Arrest #Police #Investigation #LANKA4 #Sri Lankan Army
Mithra
25 minutes ago
முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் சுட்டுக்கொலை – மூன்று சந்தேகநபர்கள் கைது!

ரத்கம – மல்லியதூவ பகுதியில் முன்னாள் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 31, 38 மற்றும் 41 வயதுடையவர்கள் என்பதுடன், கிந்தோட்டை, மாகல்ல மற்றும் காலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி ரத்கம – மல்லியதூவ சீன மைதானப் பகுதியில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முன்னாள் லெப்டினன்ட் கேணலின் சடலம் மீட்கப்பட்டது.

காலி – ரிச்மண்ட் குன்றுப் பகுதியில் வசித்து வந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'கரந்தெனிய சுத்தா' தொடர்புபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், 'கணேமுல்ல சஞ்சீவ' கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வழங்கிய குற்றச்சாட்டில் உயிரிழந்தவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கடந்த நவம்பர் 3ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ரத்கம காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!