மிரிஸ்ஸ கடற்கரையில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு:இரு பெண்கள் கைது!
#SriLanka
#Arrest
#Women
#drugs
#LANKA4
#beach
Mithra
1 hour ago
மிரிஸ்ஸ – பொல்அத்துமோதர கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட 16 மூட்டைகளிலும் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையும் கரையோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்கரைப் பகுதியை அண்மித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட 16 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது சிறிய படகொன்றும் இரண்டு வாகனங்களும் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.