சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்த அனுமதித்தால் உரிமையாளரும் கைது!

#SriLanka #Arrest #Police #LANKA4 #vehicle #Court #driver's licenses
Mithra
4 hours from now
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்த அனுமதித்தால் உரிமையாளரும் கைது!

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிற்றூந்து அல்லது உந்துருளிகளைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை தீர்மானித்துள்ளது.

18 வயதுக்குக் குறைந்தவர்களாக இருந்தாலும் அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனம் செலுத்த அனுமதி வழங்கினால், குறித்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரை வாகனம் செலுத்தும் பணியில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தும்போது விபத்து ஏற்பட்டால், அதன் பாரதூரத்தன்மைக்கு அமைய வாகன உரிமையாளருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் அவரை விளக்கமறியலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!