நிக்கோபார் தீவுகளை ஆடை அற்றவர் நாடு என கூற காரணம் என்ன?
நிக்கோபார் தீவுஜாரவா ஆதிவாசி மக்கள் இந்த நிலம் தங்களுக்கானது எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு வெளியுலகில் உள்ள நவீன சட்டதிட்டங்கள் குறித்து ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவது இல்லை.
அந்தமானின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வசிப்பவர்கள். ஆக்ரோசமானவர்கள் என்பதால் இவர்களின் இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இவர்களின் எண்ணிக்கை சராசரியாக 471 அளவிலேயே உள்ளது.இந்தியாவே சந்திக்க பயப்படும் சென்டினேலீஸ் தீவு ஆதிவாசிகள் இங்கேயும் இருக்காங்க . இத்தீவைச் சுற்றியுள்ள சுமார் மூன்று மலை தூரத்திற்குக் கூட யாரும் செல்லக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
காரணம், இப்பகுதியில் வசிக்கும் மக்களால் கொலை செய்யப்படுவதே. இவர்கள் வெளி மக்களை அவர்களின் தீவில் காலடி வைக்க அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்கள் உடலின் மிச்சம் மீதியே வெளியேறும். இந்த தீவில் வசிக்கும் மக்களின் பேச்சு, மொழி அருகில் உள்ள தீவு மக்களுக்கே புரிவதில்லை என்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் காணப்படும் ஆதிவாசிகள் போல தோற்றம் கொண்ட இவர்களின் உண்மையான தோற்றம் தான் எது ?. எங்கிருந்து வந்தார்கள் ? இவர்களின் அன்றாட வேலை தான் என்ன என யாருக்குமே தெரியாது.
அந்தமானுக்கு உட்பட்ட தீவுகள் குறித்தும், அங்கு வசிக்கும் ஆதி மனிதர்கள் குறித்தும் தஞ்சைக் கல்வெட்டில் நக்காவரம் என குறிப்பிடப்பட்டுள்ளத. நக்காவரம் என்றால் நிர்வாணம் என பொருள். அந்தமான் பகுதியில் முன்பு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் குறித்தம், தற்போது இந்தத் தீவில் வசிக்கும் ஜாரவா இன மக்களைக் குறித்தும் அன்றே தஞ்சைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பு.
சோழர்களின் பாதுகாவலர்கள் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் முழுவதுமே சோழப்பேரரசின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டதாக கதைகள் உண்டு. பெரிய நிக்கோபார்த் தீவருகில் புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
அதோடு நிக்கோபாருக்கு உட்பட்ட பகுதிக்கு சோழர்கள் அடிக்கடி பயணித்தாகவும் வரலாறு உள்ளது. இவற்றின் மூலம் இப்பகுதி மக்கள் சோழர்காலத்தில் மன்னர்களின் பாதுகாவல்களாக, மக்களாக இருந்திருப்பர் என கருதப்படுகிறது.