இரண்டாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

Nila
4 years ago
இரண்டாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாக  ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

தற்போது எஞ்சியிருக்கும்  மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இலங்கைத் ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4