பெண்ணொருவரின் கையை வெட்டி கைப்பையைத் திருடிய நபர் கைது

Nila
4 years ago
பெண்ணொருவரின் கையை வெட்டி கைப்பையைத் திருடிய நபர் கைது

கொஹுவல பிரதேசத்தில்  பீரிஸ் வீதியில் பயணித்த பெண் ஒருவன் கையை கத்தியால் வெட்டி அவரது கைப்பையை திருடிய நபரை மவுண்ட் லவ்னியா பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

கைப்பையில் 300,000 ருபாய்  மதிப்புள்ள மொபைல் போன், வங்கி புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் ரூ .10,000 ஆகியவை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட கைப்பை வெரஹெர வெலிபார பகுதியில் உள்ள ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரலெஸ்கமுவ- வேரஹருவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதானவர் எனவும் குறித்த நபர்  போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் சந்தேக நபர் பெண்ணின் கைப்பையை கொள்ளையடித்து சைக்கிளில் தப்பிச் சென்றதை பதிவு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4