யானைகளின் மர்ம மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில்

Nila
4 years ago
யானைகளின் மர்ம மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில்

ஹபராண பகுதியில் ஏழு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு இன்று (20) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வனவிலங்கு பயிப்பாளருக்காக  ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் 26ம்  திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதற்கு முன்னர் தொடர்புடைய விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு துணை சொலிசிட்டருக்கு உத்தரவிட்டது.

அண்மையில் ஹபராண பகுதியில் ஏழு யானைகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து முறையான விசாரணை தேவை என்று கூறி சுற்றுச்சூழல் நீதி மையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4