கொரியாவில் தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்த இலங்கையர் மரணம்

Nila
4 years ago
கொரியாவில் தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்த இலங்கையர் மரணம்

இலங்கையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொரியாவில் தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்து உயிரிழந்துள்ளார்.

கொரியாவின் கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் உள்ள ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை செய்த பின்னர் தொழில்துறை விபத்தில் குறித்த தொழிலாளி உயிரிழந்துள்ளதாக கொரியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 33 வயதான குறித்த தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் அவர் எண்ணெய் அழுத்த அமுக்கியில் தட்டை மாற்ற முயற்சி செய்தவேளை அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அருகிலேயே வேறு இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்தனர்இ ஆனால் பாதிக்கப்பட்டவர் அலறுவதைக் கேட்கும் வரை அவர்கள் விபத்து பற்றி அறிந்திருக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு புதிய தொழிலாளி எனவும்இ அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் சேர்ந்துள்ளாரெனவும்தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் விபத்துக்கான சரியான காரணம் குறித்து  பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4