பள்ளிகள் எப்போது திறந்தாலும் குழந்தைகளை அனுப்பத் தயார் - 21 சதவீத பெற்றோர்கள் கருத்து

Nila
4 years ago
பள்ளிகள் எப்போது திறந்தாலும் குழந்தைகளை அனுப்பத் தயார் - 21 சதவீத பெற்றோர்கள் கருத்து

கடந்தாண்டு அக்டோபர் மாதம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
2வது அலையால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 361 மாவட்டங்களில் 32,000 பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
'தங்களது மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட கோவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்' என, 32 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
'குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை' என, 48 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
'பள்ளிகள் எப்போது திறந்தாலும் குழந்தைகளை அனுப்பத் தயார்' என, 21 சதவீத பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில் 47 சதவீத பெற்றோர் முதல் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
27 சதவீதத்தினர் 2ம் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
26 சதவிகிதத்தினர் 3ம் நிலை, 4ம் நிலை மற்றும் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4