மட்டக்களப்பில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த  மகன்

Prathees
4 years ago
மட்டக்களப்பில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த  மகன்

தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 45 வயதுடைய மகன் இன்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில்  இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த  பொன்னுத்துரை தவமணி (65 வயது) என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன் தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார். எனினும்இ தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 44 வயதுடைய மகனை கைது செய்ததுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4