நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்

Prathees
4 years ago
நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூட்டுதல் அல்லது நாடளாவிய பயணக் கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4