கம்பஹாவில்  வீடுகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 7000 கோவிட் நோயாளிகள் 

Prathees
4 years ago
கம்பஹாவில்  வீடுகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 7000 கோவிட் நோயாளிகள் 

கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் ஓகஸ்ட் 1ம் திகதி முதல் 9ம்திகதி வரை  12,555 கோவிட் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (10) நடைபெற்ற கம்பஹா மாவட்ட கோவிட் குழு கூட்டத்தில்  இன்னும் 7,003 பேர்  வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அடையாளம் காணப்பட்ட 12,555 நோயாளிகளில், 4,046 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.1,506 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

மேலும்2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தில் 1,033 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.அவர்களில் 55 வீதமானோர் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் 135 இறப்புகள் நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவிலிருந்து பதிவாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4