சில மனோதத்துவ உண்மைகள்
Nila
3 years ago
- ஆண்கள் பெண்களை கவர ஏங்குகின்றனர், பெண்கள் ஆண்களை கவர ஏங்குகின்றனர்.
- ஆணோ பெண்ணோ நீங்கள் ஒருவருடன் உரையாடும் போது ஒரு வார்த்தை பதில்களை மட்டுமே அவர் கொடுக்கும் பட்சத்தில், அவர்களுடனான உரையாடலை நிறுத்துவது சிறந்தது.
- அன்பு காமம் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட கோடுதான் காதல்.
- முதிர்ச்சியற்றவர்களையும் முதிர்ச்சி அடையச் செய்யும் காதல் தோல்வி.
- ஒரு மனிதன் இருளில் எவ்வாறு செயல்படுகிறானோ அதுவே அவனுடைய உண்மையான குணம்.
- இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்தோடுதான் பழகுகின்றனர்.
- எதிர்பார்ப்புகள் என்னவோ ஏமாற்றத்தை தரவல்லது. ஆனால் எதிர்பார்ப்பின்மை விரிசல்களை ஏற்படுத்தும்.
- நீ எதனை செய்ய அஞ்சுகிறாயோ அதுவே உன்னை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவல்லது.
- நீங்கள் எதனுடன் அதிகம் பழக்கப்பட்டுள்ளீர்களோ, ஒவ்வொரு முறை அதனை சார்ந்த செயல்களை செய்யும் பொழுது அதுவே உங்களுக்கு முதலில் தோன்றும்.
- தனிமை ஒரு மனிதனை கோபுரத்திற்கும் இட்டுச்செல்லும், அதல பாதாளத்திற்கும் இட்டுச்செல்லும். அதனை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் இருக்கிறது.