இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரபல நடிகை சுனைனா

#Actress #TamilCinema #Abuse #LANKA4 #Instagram #Warning #L4
Prasu
1 hour ago
இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரபல நடிகை சுனைனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சுனைனா, சிலர் மீது சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

எனது முகத்தை எனது அனுமதியின்றி ஆபாசமான வீடியோவில் டிஜிட்டல் முறையில் இணைத்துள்ளனர். இந்த அருவருப்பான மற்றும் வஞ்சகமான செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த வீடியோவிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனுடன் என்னை இணைத்துப் பேசப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்.

இது எனது தனியுரிமை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தின் மீதான தீவிர தாக்குதலாகும். இது பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு பரப்பும் செயலாகும்.

இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், பதிவேற்றியவர்கள், வாட்ஸ்அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் உடனடியாக அதை நீக்க வேண்டும்.

வீடியோவை உருவாக்கியவர்கள் மட்டுமின்றி, அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்பவர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கைகள் பாயும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!