கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி.

Reha
4 years ago
கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி.

பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை - சீனக் கூட்டு நிறுவனத்தினால் பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினை சட்ட ரீதியாக கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில் இன்று(10.08.2021) நடைபெற்ற குறித்த ஒன்று கூடலில் சம்பிரதாயபூர்வமாக ஏழு பேருக்கு  அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கௌதாரிமுனைப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான சுமார் 52 பிரதேசக் கடற்றொழிலாளர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தனர். 

அதனடிப்படையில், பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, பண்ணை அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவரும் கடற்றொழில் அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது. 

இந்நிலையில், உடனடியாக களத்தில் இறங்கி வேலைகளை ஆரம்பிக்குமாறு பயனாளர்கள் மற்றும் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

அதேவேளை, இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைக் குஞ்சு  பராமரிப்பு நிலையத்தின் முதலீடும் தொழில்நுட்பமும் எமக்கு அவசியமாக இருப்பதனால் குறித்த கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினை கெளதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்திடம ஒப்படைப்பதற்கு தீர்மானக்கப்பட்டள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவுத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட கௌதாரிமுனை கடலட்டை பண்ணை விவகாரத்திற்கு கடற்றொழில் அமைச்சரினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு்ள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4