தியானம் செய்வதற்கு மிகச் சரியான நேரம் எது?

Prathees
3 years ago
தியானம் செய்வதற்கு மிகச் சரியான நேரம் எது?


பலருக்கும் தங்களது பரபரப்பான வாழ்க்கை சூழலில் தியானம் செய்வதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. பலரும் இப்பொழுது அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள்.

சரியான நேரம் இதை செய்வதற்கு என்று ஒன்று கிடையவே கிடையாது என்று கூறுகிறார்கள். நீங்கள் எப்பொழுது தயாராக இருக்கிறீர்களோ அப்பொழுது அதை செய்து முடித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதை தான் காலம் காலமாக பல ஞானிகளும் கூறிவருகின்றனர். நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கான நேரம் வரவேண்டும் என்று காத்துக் கொண்டு இருப்பதை விட நீங்கள் தயாராக இருக்கும் பொழுதே நீங்கள் செய்ய வேண்டிய வேலையை ஆரம்பித்து விடுவது மிகவும் நல்லது. ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை ஒருநாள் செய்து விடுவோம் என்று எண்ணுவதை விட இப்போதே ஆராய்வதற்கு ஆரம்பித்து விட வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

உலகம் முழுவதுமுள்ள பல விதமான தியானப் பயிற்சியாளர்களும் கூறுவது என்னவென்றால், சூரியன் உதிப்பதற்கு சரியாக இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு தியானத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். சூரியன் பூமியைப் பார்த்து 60 டிகிரி கோணத்தில் இருக்கிறது. அப்பொழுது அதிகமான சக்தியானது பூமிக்கு கிடைக்கும். இது போன்ற நேரங்களில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் சக்தி அளிக்கும் என்று கூறுகிறார்கள். காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரம் ஆனது மிகவும் அற்புதமான நேரம் என்று கூறுகிறார்கள். இந்த அற்புதமான நேரம் உங்களது சக்தியை இந்த பிரபஞ்சத்தோடு இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தடையும் இல்லாத அருமையான நேரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!